ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (13:00 IST)

சொல்லி அடிச்ச செந்தில் பாலாஜி: அதிமுக - அமமுகவிற்கு அவமானம்!

நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என கூறியது போல வெற்றி பெற்று தன்னை விமர்சித்த அதிமுக மற்றும் அமமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
செந்தில் பாலாஜி திடீரென திமுகவுக்கு தாவியது டிடிவி தினகரனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதால் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தேர்தல் சமயத்தில் அமமுகவினர்களும் அதிமுகவுடன் கைகோர்க்க திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி அவர்க்குறிச்சி என்பதால் அங்கு சேந்தில் பாலாஜியை தோற்கடிக்க தனி கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்த தொகுதிக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன், உட்பட 10 அமைச்சர்கள் கொண்ட குழும் தயாரானது. 
ஆனால், செந்தில் பாலாஜி முன்பு யாரை கொண்டு போய் வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் காணாமலே போய்விடும் அளவுக்கு தொகுதியில் செல்வாக்கு நிறைந்த அவர் அசால்ட்டாக வெற்றி பெற்றுவிட்டார். 
 
ஆனால், பிரச்சாரத்தின் போது அதிமுக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன் என்றும், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் சவால் விடுத்தார்.
 
செந்தில்பாலாஜி நேற்று வெற்றி பெற்றவுடன், என்னை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியவர்களின் ராஜினாமா எப்போது என கேட்டு பக்கா பதிலடியை கொடுத்துள்ளார்.