1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (19:38 IST)

நடிகர் நாசர் மனைவிக்கு ஒட்டு போடாதீங்க - தம்பி கதறல்

தமிழில் பிரபல நடிகரான நாசருடைய மனைவி கமீலா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தற்போது தீவிர பிரசாரத்தில் ஈட்டு வருகிறார்.
சொந்த மாமனார் ( நாசர் அப்பா , அம்மா) மாமியாரையே பார்த்துக் கொள்ளாதவர் கமிலா தன் சொந்த அப்பா அம்மாவை அவர் கண்டு கொள்வதில்லை. 
நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். மிகப்பெரிய நடிகரான அவர்  மேடைகளில் பேசுவதுடன் சரி! ஆனால் நிஜ வாழ்வில் அப்படி இல்லை.
 
கமீலாவுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியே கிடையாது. எனக்கு மனவளர்ச்சி பாதித்த தம்பி உள்ளார். இந்த சூழ்நிலையில் நான் தான் பார்த்துக்கொள்கிறேன். எனவே கமீலாவுக்கு சீட் கொடுக்கக் கூடாது.