1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:23 IST)

திமுகவில் ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா..? பிரேமலதா கேள்வி..!

Premalatha
தேர்தலில் போட்டியிட திமுகவில் அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் அவர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பரிமாறு தாவி விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், திமுகவில் குறுநில மன்னர்கள் உள்ளதாகவும், அவர்கள் தலைமையில் தான் எல்லாம் நடக்கும் என்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் ஒன்றிய செயலாளர் முதல் தொண்டர்கள் வாய்ப்பு கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக என்று அவர் கூறினார்.
 
தேமுதிகவிலும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விருதுநகரில் மட்டும் தான் கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவதாகவும் பிரேமலதா கூறினார்.
 
திமுகவில் ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பினார். 


அதிமுக தேமுதிக கூட்டணி மகத்தான கூட்டணி என்றும் ஆட்சி பலம் அதிகார பலத்தை வைத்து ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள் என்றும் எனவே வருகிற 19ஆம் தேதி அனைவரும் தவறாமல் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்  என்றும் திருமதி பிரேமலதா கேட்டுக்கொண்டார்.