1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (20:01 IST)

தே.ஜ கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும்..! முதலமைச்சர் ரங்கசாமி சொன்ன முக்கிய தகவல்.!!

rangasamy
புதுச்சேரியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை கலந்துபேசி முடிவெடுப்போம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
இதனிடையே கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தலைமையில் பாஜக நிர்வாகிகள், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30- நிமிடம் ஆலோசனை நடத்தினார், அப்போது பாஜக போட்டியிட முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
 
இந்நிலையில் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை கலந்துபேசித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார்.