1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:15 IST)

பாஜகவுடன் தமாகா கூட்டணி உறுதி..!! ஜி கே வாசன் விரைவில் அறிவிப்பு.!

gk vasan
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
 
வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருக்கின்றனர். அந்தவகையில் திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
 
இந்நிலையில் பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

 
முன்னதாக அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஜி கே வாசன் ஈடுபட்ட நிலையில், அது தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது