வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (14:25 IST)

வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் பணிகள் நிறைவடைந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது!

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
 
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணியானது நடைபெற்றது.
 
இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார்  சீல் வைத்தார்.
 
மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
 
கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.