ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (18:36 IST)

எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தால் இரட்டை இலைக்கு எதிராக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் -சி.ஆர்.சரஸ்வதி

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு சோழவந்தான் பகுதிகளில் வாக்குகள் கேட்டு  பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சி.ஆர் சரஸ்வதி. 
 
அப்போது அவர் பேசியது ....
 
தமிழகத்தில்  மூன்று அணியாக இருக்கிறோம். ஒன்று துரோகத்திற்கு பேர் போன அதிமுகவை அளித்துக் கொண்டிருக்கிற இரட்டை இலை சின்னத்தை விலை பேசிக் கொண்டு திமுகவிற்கு சாதகமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற எடப்பாடி அணி .
 
மற்றொன்று திமுக அணி அடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையிலான நமது அணி என்று மூன்று அணியாக இருக்கிறோம்.
 
எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு முதல்வர் ஆனார். என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை இன்று வரை டிவியில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்
கிறீர்கள். உலகத்திலேயே முட்டி போட்டு முதலமைச்சரானது ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எடப்பாடி பழனிச்சாமி தான் .
ஒரு மனுஷன் நன்றி மறக்கலாமா, துரோகம் பண்ணலாமா ஓபிஎஸ் ஆவது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடியை யாருக்கு தெரியும். சேலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்தவர் தமிழகத்தில் ஒரு அமைச்சர் அவ்வளவுதான் அவரை முதலமைச்சராக பரிந்துரை செய்தவர் டிடிவி தினகரன் முதலமைச்
சராக்கியவர் சின்னம்மா பரிந்துரை செய்த டிடிவிக்கும் துரோகம் செய்துவிட்டார். 
 
முதல் அமைச்சர் ஆக்கிய சின்னம்மாவிற்கும் துரோகம் செய்துவிட்டார். நாலரை வருஷம் உறுதுணையாக இருந்த ஓபிஎஸ் க்கும் துரோகம் செய்துவிட்டார். தாங்கிப் பிடித்த பிஜேபிக்கும் துரோகம் செய்துவிட்டார். எடப்பாடியிடம் நன்றியும் இல்லை உண்மையும் இல்லை. விசுவாசமும் இல்லை துரோகம் மட்டும்தான் உள்ளது.
 
இரட்டை இலை சின்னத்திற்காக பாடுபட்டவர்கள் நாங்கள் அம்மா எத்தனையோ தேர்தல்களை சந்திக்கும் போது, இதே சோழவந்தானில் இரட்டை இலைக்காக வாக்குகள் கேட்டிருக்கிறோம். 
 
ஆனால் இன்று இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு காரணம் உதயகுமார், ஜெயக்குமார், சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான்.
 
இரட்டை இலை மீட்க வேண்டிய இடத்தில் தற்போது இருக்கிறோம். இவர்கள் ஒன்றாக இருந்திருந்தால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா, பாரதிய ஜனதாவின் ஆலோசனையை இவர்கள் கேட்டிருந்தால் அனைவரும் ஒன்றாகி இருந்திருப்போம் .
 
2021ல் அம்மாவின் ஆட்சி அமைத்திருப்போம். இந்த ஆட்சி பறிபோனதற்கு காரணம் எடப்பாடி தான் அடுத்தடுத்து வரும் தோல்விகளைசந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.எடப்பாடியால் தான்.
 
ஆகையால் இதை மாற்ற டிடிவி தினகரனை டெல்லி நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் பேசினார்.