1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:00 IST)

பாஜகவுடன் அதிமுகவை இணைக்கும் முயற்சி தோல்வி..! இனி தலையிட விரும்பவில்லை - ஜி கே வாசன்..

admk bjp
மக்களவைத் தேர்தலில்  கூட்டணி தொடர்பாக அதிமுகவின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
 
கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. பாஜகவுடன் இனி கூட்டணியில் என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
 
இதை அடுத்து பாஜக அதிமுக கூட்டணியை இணைக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாஜக கூட்டணிக்கு வர அதிமுக மறுப்பு தெரிவித்து விட்டது.
 
இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய ஜி.கே வாசன், கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியது நட்பின் அடிப்படையில் தான் என்றும்  கூறியுள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார். ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளுடன் நட்பின் அடிப்படையில் கூட்டணி குறித்து பேசி வருகிறேன் என்று குறிப்பிட்ட ஜி கே வாசன், விரைவில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்ததும் தொகுதி பங்கீடு முழு வடிவம் பெறும் என்றார்.

 
சாதாரண மக்களின் எண்ணங்களை திமுக அரசு பிரதிபலிக்க தவறிவிட்டது என்றும் ஜி கே வாசன் விமர்சித்துள்ளார்.