1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (14:27 IST)

எச்.ராஜா ’யாகம்’ செய்யக் காரணம் இதுதானா...

அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதே தொகுயில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதனால் அத்தொகுதிக்கு நட்சத்திர தொகுதியாகி உள்ளது. 
 
அதிமுக மெகாகூட்டணியில் உள்ள பாஜகவுக்கு அக்கூட்டணி கட்சியினர் பெரிதும் ஆதரவு அளித்தாலும்கூட, கடந்த காலங்களில் எச்.ராஜா பேசிய பேச்சுகளை அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடமாட்டார்கள்.
 
இந்நிலையில் இனி வரப்போகிற தேர்தலிலும் அது பிரதிபலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே தனக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள கார்த்திக் சிதம்பரத்தை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவிட்டார். 
 
எனவே தனக்கு எதிராகவர்களை ஒழிக்க அவர் தஞ்சாவூர் சுவாமிநாத சுவாகி கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்ற எச்.ராஜா சத்ரு சஹார யாகம் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.