வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (08:32 IST)

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: நீடிக்கும் குழப்பம்; மக்கள் கடும் அவதி!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளதால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஏராளமான வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளதால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இன்னும் அரை மணி நேரத்தில் பழுது சரி செய்யப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் மாலை வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.