என் சின்னம் மட்டும் மங்கலாக உள்ளது – சீமான் ஆவேசம் !

Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (15:03 IST)
தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் மட்டும் மங்கலாகப் பொறிக்கப்பட்டுள்ளது என சீமான் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
 
தனது கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். திமுக, அதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக என அனைத்துக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துவருகிறார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மாலதியை ஆதரித்து சீமான் அவுரித் திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
பிரச்சாரத்தின் போது பேசிய அவர் ‘ வாக்குச்செலுத்தும் இயந்திரத்தில் அனைத்து சின்னங்களும் பளிச்சென இருக்கின்றன, ஆனால் நம் சின்னம் மட்டும் மங்கலாகவும் சின்னதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த இடத்தைக் காலியாக அப்படியே விட்டிருக்கலாமே.. ’ என ஆவேசமாகப் பேசினார்.இதில் மேலும் படிக்கவும் :