1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (14:34 IST)

வாஜ்பாயை பிரதமராக்குவேன்...பரப்புரையில் வழக்கம்போல் உளறிய ராமதாஸ்!!!

வாஜ்பாயை பிரதமராக்குவேன் என ராமதாஸ் பரப்புரையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

 
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் படுக்கையை பகிர்வது போன்றது என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்து அதிமுக, பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
 
ஆனால் பழக்கதோஷத்தில் எந்தக் காரணத்திற்கும் திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.
 
இதையடுத்து ராமதாஸ் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட போது, வாஜ்பாயை பிரதமராக்க வேண்டும் என கூறினார். உடனடியாக சுதாரித்துக்கொண்டு பின்னர் மோடியை பிரதமராக வேண்டும் என்றார். வாஜ்பாய் இறந்து பல மாதங்களாகிறது, இறந்துபோன மனிதரை எப்படி டாக்டர் பிரதமராக்குவீர்கள் என நெட்டிசன்கள் அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.