வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டைஇலை – காமெடிப் பிரச்சாரம் !

Last Modified ஞாயிறு, 31 மார்ச் 2019 (11:04 IST)
தேனி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஒ பி ரவீந்தரநாத் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான ஓபிஎ இந்த முறை தேனி தொகுதியில் தன்னுடைய மகனை மக்களவைத் தொகுதி உறுப்பினருக்கு நிறுத்தியிருக்கிறார். அமமுக சார்பிக் தங்க தமிழ்ச்செல்வனும் காங்கிரஸ் சார்பி ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதேத் தொகுதியில் போட்டியிடுவதால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் எப்படியும் தனது மகனை வெற்றி பெற வைப்பதற்காக ஓபிஎஸ் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அதிமுக முக்கியப்புள்ளிகள் மற்றும் அமைச்சர்கள் என எல்லோரையும் பிரச்சாரத்துக்காகவும் களப்பணிக்காகவும் தேனிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் உள்ளூர் பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவுக் கேட்டு வருகிறார். மேலும் ரவீந்தரநாத்தும் தனக்காக தேனி தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

ஆனால் அவர் செல்லும் பிரச்சாரங்களில் எல்லாம் சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி வருகிறார். கடந்த வாரம் பேசியக் கூட்டம் முக்குலத்தோர் சமூகத்தினரை உயர்த்திப் பேசும் விதமாகப் பேசினார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அந்த பேச்சுக்குக் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து தற்போது நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் ‘வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிவக்க இரட்டை இலை’ என நகைச்சுவையாக பேசியுள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இவரையா நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :