தடா, பொடாவயே பாத்தவங்க; இந்த ரெய்ட்லாம் எம்மாத்திரம் போடா...: ஸ்டாலின் அதிரடி

stalin
Last Updated: திங்கள், 1 ஏப்ரல் 2019 (16:59 IST)
வேலூரில் வருமான வரித்துறை அதிரடியாக நடத்தி வரும் சோதனையால் திமுக தரப்பு கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், ஸ்டாலின், சோளிங்கரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அதிரடியாக பேசியுள்ளார். 
தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள ஸ்டாலின், துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்ட் குறித்து பின்வருமாறு பேசினார். 5 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நேரத்தில் திமுக பொருளாலர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை. துரைமுருகன் மகன் கல்லூரியில் வருமான வரி சோதனை. ஏனென்றால் துரைமுருகனின் மகன் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர். 
தேர்தல் அதிகாரி தெரிவிக்கிறார், போலீஸ் தரப்பில் வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டோம் என்று, இப்போது நான் கேட்கிறேன், நான் முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் புகார் அளித்தால் வருமான வரித்துரையினர் அவர்கள் வீட்டில் சோதனை நடத்துவார்களா? 
 
குறுக்கு வழியில் திமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அடிபணிய வைக்க நினைத்தால் அது முடியாது. நாங்க தடாவயும் பாத்தவங்க, மிசாவயும் பாத்தவங்க, பொடாவையும் பாத்தவங்க போடா... உங்க சட்டம் இன்னும் என்ன செய்யும். திமுக மிரட்டலுக்கு அச்சுறுத்தலுக்கும் பணியாது என பேசினார். 


இதில் மேலும் படிக்கவும் :