செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (19:14 IST)

சரக்கு, தம், துப்பாக்கி சகலமும் கலந்து வெளியாகி சர்ச்சையில் சிக்கிய லியோ போஸ்டர்!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
 
இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சை கிளப்பியுள்ளார். அதாவது வருகிற 22 தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி என்ற முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் வாயில் சிக்ரெட், கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு இருக்க மற்ற நடிகர்கள் எல்லோரும் சரக்கு அடித்துக்கொண்டு ஆடுகிறார்கள். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.