வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:46 IST)

ரகசிய திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம்! வைரல் புகைப்படம் இதோ.!

பழம்பெரும் நடிகர் என்எஸ்கிருஷ்ணனின் பேத்தியும், பாடகியுமான ரம்யா கடந்த பிக்பாஸ் சீசன் 2ல் பங்குபெற்று ரசிகர்களுக்கு பரீட்சியமானார். ஆனால், ஒரு சில காரணத்தால் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் அடிக்கடி தனது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். 


 
இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாவில் திடீரென திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகர் சத்யா என்பவரை வீட்டிற்கு தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். 


 
நடிகர் சத்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலக்குயில் தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான நடிகை மும்தாஜ், ஜனனி ஐயர் மற்றும்  தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி , ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.