ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (20:03 IST)

அனுமதி கேட்பாரா சங்கத் தலைவர்?

இரண்டு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயர நடிகர் தன் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயருக்கும் யாரிடம் அனுமதி கேட்பது என குழப்பத்தில் உள்ளாராம்.  


 

 
ஒரு சங்கத்துக்கு செயலாளராகவும், இன்னொரு சங்கத்துக்கு தலைவராகவும் இருக்கிறார் அந்த உயரமான கறுப்பு நடிகர். அவர் நடிக்கும் புதிய படத்தில், மூன்று வேடங்களாம். அந்தப் படத்துக்கு, எம்.ஜி.ஆர். நடித்த ஒரு படத்தின் தலைப்பை வைத்துள்ளனர். அதை வைத்துத்தான் புரமோஷனும் செய்து வருகின்றனர். ஆனால், அதே பெயரில் 2009ஆம் ஆண்டு மலையாளப் படமொன்று ரிலீஸாகியிருக்கிறது.
 
சட்டப்படி, ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பை மறுபடியும் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும். இரண்டு படங்கள் இந்தத் தலைப்பில் வெளியாகியுள்ளதால், யாரிடம் அனுமதி கேட்பார் சங்கத் தலைவர்? என்று பெரிய விவாதமே நடந்து வருகிறது. ஒருவரை விட்டுவிட்டு மற்றவரிடம் அனுமதி வாங்கினால், அதை வைத்தே கம்பு சுத்த நினைக்கின்றனர் தலைவருக்கு வேண்டாதவர்கள்.