வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:52 IST)

பாஜகவில் சிக்கப் போகும் அந்த பிரபல நடிகர் யார்? அதிர்ச்சி தகவல்

பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவர் பல திரையுலகினர்களை கட்சிக்குள் இழுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் சிவகார்த்திகேயனை இழுக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் சிவகார்த்திகேயன் பாஜக வலையில் விழாமல் தப்பிக்க கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பாஜகவின் வலையில் பல பிரபல நடிகர்களை விழவைக்க முயற்சி நடந்து கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ’தமிழ் தமிழ்’ என்று பேசும் பிரபல நடிகர் ஒருவர் தற்போது இந்த வலையில் சிக்கி உள்ளதாகவும் அதேபோல் முன்னணி ஆக்சன் ஹீரோ ஒருவரும் மிகப் பெரிய தொகை ஒன்றை பெற்றுக் கொண்டு பாஜகவில் சேர சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது 
 
இருவருமே சொந்தப்படம் எடுத்து கையை சுட்டு கொண்டவர்கள் என்பதும் ஏராளமான கடன் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கடன்கள் மொத்தத்தையும் ஒரே செக்கில் அடைத்து விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளதை அடுத்து இருவரும் பாஜகவில் சேர உள்ளதாக ஒரு வதந்தி அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் பரவி வருகிறது
 
இது வதந்தியாகவே இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக உள்ளது. இருப்பினும் இந்த வதந்தி உண்மை ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்