1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (22:38 IST)

போதை மருந்து விற்ற பிரபல நடிகை: அதிர்ச்சியில் திரையுலகம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்ததாக விரைவில் ஒரு பிரபல நடிகை கைதாக வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு திரையுலகில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.



 
 
போதைப்பொருள் விற்பனை கும்பல் ஒன்றை தெலுங்கானா போலீஸ் சமீபத்தில் கைது செய்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை செய்தபோது இதற்கு மூலகாரணம் பிரபல நடிகை என்பது தெரியவந்தது.
 
பஞ்சாபில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்த அந்த நடிகை தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இவருடன் இன்னும் ஒரு பிரபல நடிகையும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விளக்கம் அளிக்க உடனடியாக காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர்களிடம் இருந்து இரு நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் இருவரும் கைதாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.