வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (18:50 IST)

லாரன்ஸ் உண்மையிலேயே ரூ.3 கோடி கொடுத்தாரா? நெட்டிசன்கள் சந்தேகம்!

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 3 கோடி ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதில் தமிழக அரசுக்கு அவர் ஐம்பது லட்ச ரூபாய் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக தமிழக அரசு இதுவரை கொரோனா தடுப்பு நிதியாக 134 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அந்த நிதியைக் கொடுத்தவர்களின் பட்டியல் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அஜித்குமார் 50 லட்சமும் சிவகார்த்திகேயன் 25 லட்சமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடியும் என விலாவாரியாக பட்டியலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ராகவா லாரன்ஸ் அறிவித்த 50 லட்ச ரூபாய் குறித்த எந்த தகவலும் இந்த பட்டியலில் இல்லை. இதனால் ராகவா லாரன்ஸ் உண்மையிலேயே பணம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர் 
 
ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்காக அவர் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தார் என்றும் ஆனால் அதில் அவர் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டு உள்ளாரா? என்றும் நெட்டிசன்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் பணம் கொடுக்காமல் இருக்க மாட்டார் என்றும் விரைவில் அவர் கொடுப்பார் என்றும் ஒரு சிலர் ராகவா லாரன்ஸுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது