திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:11 IST)

ஒன்று சேர்ந்த இயக்குநர்கள்... ஒன்று சேர்த்த அரசியல்வாதிகள்...

அரசியல் தலைவர்கள் பஞ்சாயத்து பேசி, பிரிந்து கிடந்த இயக்குநர்களை ஒன்று சேர்த்துள்ளார்களாம்.



 


“என்னுடைய ‘கருப்பர் நகரம்’ படத்தின் கதையை திருடித்தான் ‘மெட்ராஸ்’ படம் எடுக்கப்பட்டிருக்கிறது” எனப் புகார் கொடுத்தார் ஒரு இயக்குநர். அவர் இயக்கிய ‘அறம்’ படம் சமீபத்தில் ரிலீஸாகி, சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.இந்நிலையில், புகார் கொடுத்த இயக்குநரும், ‘மெட்ராஸ்’ இயக்குநரும் சமரசமாகி விட்டார்களாம். இருவருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால், அதைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் பஞ்சாயத்து பேசி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துள்ளார்களாம்.

அதன் விளைவுதான் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ‘அறம்’ இயக்குநரின் அறிக்கை. ‘காலா’ படத்துக்கு சிக்கல் எதுவும் வந்துவிடுமோ என்பதால், அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிக்கையைக் கொடுக்க வைத்தார்களாம். தன்னுடைய ஃபேஸ்புக் அல்லது பிஆர்ஓ மூலம் இதை வெளியிட விரும்பாத இயக்குநர், நீங்களாகவே எதிலாவது அனுப்பிக் கொள்ளுங்கள் என்றாராம்.  ‘மெட்ராஸ்’ கதை என்னுடையது இல்லை என்று அவரைச் சொல்லவைக்கும் வேலைகளும் நடந்து வருகிறதாம்.