பூ நடிகையைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்ட ரசிகர்
பூ நடிகை வெளியிட்ட போட்டோவைப் பார்த்து, ரசிகர் ஒருவர் அந்த கேள்வியைக் கேட்டுள்ளார்.
ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு அழகானவர் பூ நடிகை. கோலிவுட்டையே கலக்கிய அவர், தற்போது சீரியல், அரசியல் என்று பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோக்களை வெளியிடுவது அவர் வழக்கம்.
அப்படி சமீபத்தில் தன்னுடைய பழைய போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார் பூ நடிகை. அதைப் பார்த்த ரசிகர்கள், பலவிதமான கருத்துகளைக் கூறியுள்ளனர். ‘என்றும் 16’ என்று ஒருவர் கமெண்ட் செய்ய, இன்னொருவரோ, ‘நீங்கள் ஏன் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? பல பட்டங்களை வென்றிருப்பீர்களே…’ என்று கூறியுள்ளார்.