பெரியார் பிரச்சனையால் ’தலைவர் 168’ படம் கைவிடப்படுகின்றதா? பெரும் பரபரப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமதித்து விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் புலம்பி வரும் நிலையில் திமுகவினர் சற்று அதிகமாகவே ஆவேசப்பட்டு வருகிறார்கள்
இந்த நிலையில் திமுகவின் குடும்ப நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’தலைவர் 168’ படத்தை கைவிட வேண்டும் என திமுகவின் முக்கிய புள்ளிகள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி தருவதாகக் கூறப்படுகிறது இதனால் தலைவர் 168 திரைப்படம் கைவிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது
இருப்பினும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை கைவிட வாய்ப்பில்லை என்றும் தொழில் மற்றும் கொள்கையை வேறு வேறாக பார்க்கவேண்டும் என்று விளக்கம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ’தலைவர் 168’படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது