ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (20:03 IST)

‘பார்ட்-2’வுக்காக பாடுபடும் நடிகர்

உயிரைக் கொடுத்து உழைக்கக் கூடியவர் இந்த நடிகர். ஆனால், ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கை கூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கேற்ப, இவர் உயிரைக் கொடுத்து நடிக்கும் படங்களெல்லாம் ஊத்திக் கொள்கின்றன. சமீப காலமாக, இவர் நடித்த எல்லாப் படங்களுமே நடிகரின் முகத்தில் கரியைப் பூசின. 

 
எனவே, பழைய மாதிரி மசாலா பாணிக்கே திரும்புவதென்று முடிவெடுத்துவிட்டாராம். அதனால் தான், போலீஸாக நடித்த ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநரிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டாராம். 
 
அத்துடன், தனக்கு பெரும் புகழைத் தேடித்தந்த, சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அந்த மேம்பாலத்தின் பெயரைக் கொண்ட படம் போலவே இன்னொரு படத்தில் நடிக்கிறாராம். வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், அதுவும்  ‘பார்ட்-2’ மாதிரித்தான் உருவாகிறது என்கிறார்கள் யூனிட்டில் உள்ளவர்கள்.