திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (17:56 IST)

சியோமி டி.வி. பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

சியோமி நிறுவத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, சியோமியின் Mi 4A Pro டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது 32 இன்ச் மற்றும் 43 இன்ச் Mi டி.வி. மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்கப்படுகிறது.

இதற்கென 50 பயனாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய இயங்குதளம் வழங்கப்படுகிறது. இந்த புதிய இயங்குத்தளத்தின் முன்னோட்ட திட்டம், அந்நிறுவனத்தின் கம்யூனிட்டி ஃபோரம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க சியோமி Mi டி.வி. 4A 32 இன்ச் அல்லது 43 இன்ச் பயனாளர்களாக இருக்க வேண்டும். பின் அந்த பயனாளர்கள் ஃபோரம் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்பு வருகிற 20 ஆம் தேதி, இயங்குதளம் வழங்கப்படும் அந்த 50 பயனாளர்கள் யார் என அறிவிக்கப்படுவார்கள்.

இந்த 50 பயனாளர்களுக்கு முதற்கட்ட சோதனை நடத்தப்படும். அதன் பின்பு இயங்குத்தளத்துக்கான அப்டேட் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த புதிய இயங்குத்தளத்தில் ஸ்மார்ட் டி.வி.யில் கூகுள் பிளே ஸ்டோர், கூகிள் ப்ளே ம்யூசிக், கூகுள் பிளே திரைப்படங்கள், யூட்யூப் போன்ற செயலிக்கான வசிதிகள் இடம்பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.