திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (10:42 IST)

ஜியோ கடைசி நாள்: ரீசார்ஜ் செய்யாதவர்களே கவனியுங்கள்!!

டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் நிறைவு பெற இருக்கிறது. இதை தொடர்ந்து ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்ய கோரும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. 


 
 
இதுவரை 5 கோடி பேர் ஜியோ பிரைம் மற்றும் கூடுதல் ரீசார்ஜ்களை செய்துள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. 
 
தற்சமயம் உள்ள தகவல்களில் 100-105 மில்லியன் பயனாளர்களில் 30% பேர் இலவச டேட்டாவை பயன்படுத்தவே ஜியோவை பெற்றுள்ளனர். மேலும், ஜியோ பிரைம் திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரீசார்ஜ் செய்யாமல் இருத்தல்: 
 
எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் டிஆக்டிவேட் செய்யப்படும். 
 
பிரைம் மட்டும் போதும்:
 
ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.