ஒப்போ ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு
இந்தியாவில் விற்பனையாகின்ற ஸ்மார்ட் போன்களில் அதிக மக்களால் விரும்பப்படுவது ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ஆகும். இந்நிலையில் இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் ஏ5 என்ற ஸ்மார்ட் போன் நம் இந்தியாவில் அறிமுக செய்யப்பட்டது. அதில் ஒப்போ ஏ5 எஸ் 4ஜிபி ரேம் மாடல் விலை ரு. 1000 குறைக்கப்பட்டுள்ளது. இதன்விலை ரூ. 11990 என்ற விலைக்கு விற்பனையாகிறது. இதன்விலை முன்னதால ரூ. 12, 990 என்றிருந்தது.
அதேபோல் ஏ5எஸ் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் போன் ரூ. 8,990 என்ற விலையில், 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி கொண்ட இதன் விலை ரூ.9990 க்கு விற்பனையாகிறது.
மேலும் இதன் தற்போதைய விலைகுறைப்பு அமேசான், பேடிஎம், ஆஃப்லைன் ஆகிய ஆன்லைன் விற்பனை மையங்களில் அமலாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 4 ஜி.பி. ரேம் போன்ற சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.