திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (12:50 IST)

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் OPPO Find N2 Flip! – அப்படியென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

OPPO Find N2 Flip
பிரபல ஓப்போ நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான OPPO Find N2 Flip இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஓப்போ. ஓப்போ நிறுவனத்தின் முகவர் ஷாப்கள், சர்வீஸ் செண்டர்கள் இந்தியா முழுவதும் உள்ளன. சமீபமாக நவீன தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் பல நிறுவனங்களும் போட்டியிட்டு வரும் நிலையில் தற்போது ஓப்போ மடிக்கக்கூடிய வகையில் பல சிறப்பம்சங்களுடன் கூடிய OPPO Find N2 Flip என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

OPPO Find N2 Flip ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
  • மடிக்கப்படாத நிலையில் 166.2 x 7.5 mm
  • மடிக்கப்பட்ட நிலையில் 85.5 x 16 mm
  • மடிக்கக்கூடிய LTPO AMOLES டிஸ்ப்ளே
  • முன்பக்கம் பெரிய கவர் ஸ்க்ரீன்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ , ஆக்டோகோர், மாலி ஜி710 எம்சி10,
  • 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 50 எம்பி வைட் ஆங்கிள், 8 எம்பி அல்ட்ராவைட் டூவல் கேமரா
  • சைட் ஃபிங்கர்ப்ரிண்ட், வைஃபை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  • 4300 mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், யூஎஸ்பி டைப் சி

இந்த OPPO Find N2 Flip ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் ப்ளாக், மூன்லிட் பர்ப்பிள் மற்றும் கோல்டு ஆகிய மூன்று வண்ணத்தில் கிடைக்கிறது.

OPPO Find N2 Flip ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் மார்ச் 17ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட்டில் இந்த OPPO Find N2 Flip ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

Edit by Prasanth.K