வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (14:32 IST)

கேமரா குவாலிட்டி தெறிக்குது..! அட்டகாசமான ஒன்ப்ளஸ் நோர்ட் CE3 லைட்!

OnePlus Nord CE3 Lite 5G
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் முன்னணியில் ஒன்ப்ளஸ் உள்ளது. ஒன்ப்ளஸ் தயாரிப்பான OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வெளியானது. சிறப்பான கேமரா தரத்துடன், பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G சிறப்பம்சங்கள்:
 
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட், ஆக்டா கோர் சிபியூ,
  • 6.72 இன்ச் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல் ரெசல்யூசன்
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னெல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1
  • 108 எம்.பி வைட் ஆங்கிள், 2 எம்.பி மேக்ரோ, 2 எம்.பி டெப்த் ட்ரிப்பிள் பேக் கேமரா,
  • 16 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • சைட் கைரேகை சென்சார், வைஃபை, 5ஜி
  • 5000 mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் பேஸ்டல் லைம் மற்றும் க்ரொமேட்டிக் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 8ஜிபி+128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.19,999க்கும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.21,999க்கும் இந்தியாவில் விற்பனையை தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K