திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (14:01 IST)

22 மணிநேர பேட்டரி: வந்தாச்சு நோக்கியா 150!!

ஹெச்டிஎம் க்ளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா பேசிக் போன் அறிமுகமாகியுள்ளது. 


 
 
ஹெச்டிஎம் க்ளோபல் நிறுவனம் மீண்டும் நோக்கியா பேசிக் மொபைல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. நோக்கிய 150 (Nokia 150) என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
 
இரண்டிலுமே 2ஜி ஜிஎஸ்எம் சிம் கார்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். 2.4 இன்ச் திரை, சீரீஸ் 30 இயங்குதளம், 0.3 MP கேமரா, 1020mAh பேட்டரி ஆகியவை நோக்கியா 150 மொபைலில் இருக்கும். பேட்டரி 22 மணிநேர டாக்டைம் வரை நீடித்திருக்கும்.
 
கேமராவுடன் எல்.ஈ.டி. ஃப்ளாஷ் இருப்பது சிறப்பு அம்சமாகும். இது தவிர, MP3 ப்ளேயர், FM ரேடியோ, ப்ளூடூத் ஆகியவையும் உண்டு.
 
ஒரு வேரியண்டில் ஒரே ஒரு சிம் மட்டும் பயன்படுத்தும் படி உள்ளது. மற்றொன்றில் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்த முடியும். இதைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் பொதுவாகவே உள்ளன.
 
ரூ.1800 முதல் ரூ.2,670 வரை இந்த மொபைல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.