செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By SInoj
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:21 IST)

1 ஜிபி டேட்டாவின் விலை உயரப் போகிறதா? ஏர்டெல் நிறுவனர் சூசகம்!

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின்  நிறுவனர் சுனில் மிட்டல். இவர் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விரைவில் டேட்டாவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரலாம் என தெரிவித்துள்ளார்.

கடந்த் சில வருடங்களுக்கு முன் ஒரு ஜிபியின் விலை ரூ. 90 லிருந்து ரூ. 100 வரை இருந்தது. ஆனால் ஜியோவின் வருகைக்குப் பின் இந்தியாவில் ஜிபியின் விலை குறைந்தது. எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் ஆனது.

இந்நிலையில் இரண்டு மாதங்களில் ஏர்டெல் வோடபோன் இந்தியா நிறுவன 47 லட்சம் பயனாளர்களை இழந்துள்ளது.

எனவே தற்போது இதுகுறித்து கூறியுள்ள சுனில் மிட்டல்,  மாதம் 16 ஜிபிக்கு 160 ரூபாயை கஷ்டமர்கள் தருகிறார்கள்.  ஏர்டெல் நிறுனவத்தால் நீ்ண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் இந்த நிலைமாறலாம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.