1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 26 மே 2016 (01:18 IST)

வாட்ஸ்அப்புக்கு போட்டியாக கூகுள் ஆலோ

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக கூகுள் ஆலோ என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
சமுக வலைதளங்களில் பிரபலமான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய இரண்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவராலும் பயன்படுத்தும் செயலிகள் ஆகும்.
 
கூகுள் நிறுவனத்தின் ஹங்அவுட்ஸ் என்ற ஜிமெயில் மெஸஞ்சர் பெரிதும் பிரபலம் அடையவில்லை. இருந்தும் தற்போது வாட்ஸ் அப்புகு போட்டியாக கூகுள் ஆலோ என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இந்த ஆலோ வாட்ஸ்அப்-ஐ விட சற்று அதிக வசதிகளை உள்ளடக்கியது. கூகுள் பிளஸ், ஹேங் அவுட் மெசேஞ்சர் போன்ற கூகுளின் தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன்களை விட சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோ அனைவராலும் பயன்படுத்தப்படுமா அல்ல வழக்க போல் தோல்வி அடையுமா என்பது சந்தேகம் தான்.
 
இருப்பினும் விடா முயற்சியோடு கூகுள், ‘ஆலோ' என்ற ஆப்பை, வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது. மெசேஜ்களை பாதுகாக்க ‘என்கிரிப்ஷன்' வசதியும், நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக பதில் வழங்கும் விருப்பத்தேர்வும் இதில் உள்ளன. 
 
மேலும் இந்த ஆப் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.