செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (22:29 IST)

செல்போனில் பச்சை நிறக்கோடுகள் இருக்கிறதா.? வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாம்சங்..!!

Cell Phone
கேலக்சி மாடல் செல்போன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக சாம்சங் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
பல்வேறு புது வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி  வாடிக்கையாளர்களை சாம்சங் நிறுவனம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கேலக்சி மாடல் செல்போன்கள் மற்றும் நோட் மாடல் செல்போன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன.
 
இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேலக்சி மாடல் செல்போன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது
 
கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் செல்போன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற செல்போன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது