1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:43 IST)

ரூ.99 கட்டினா வருசம் முழுக்க ப்ரீ! – டிஸ்கவரி ப்ளஸ் அசத்தல் ஆஃபர்!

ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு பொழுதுபோகும் விதமாக ஓடிடி தளங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது டிஸ்கவரியும் இணைந்துள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மாத கணக்காக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் பொழுதுபோக்கு தளங்களான அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்றவை பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

சமீபத்தில் டிஸ்னி பளஸ் உடன் இணைந்த ஹாட் ஸ்டார் விஐபி பாஸ் என்ற புதிய ப்ளானை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி ப்ளஸ் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களை ஆண்டுக்கு ரூ.399 ரூபா செலுத்தி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், ஸ்டார் வார்ஸ் உள்ளிட வெப் சீரிஸ்களும் கிடைப்பதால் கடந்த மாதத்தில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஹாட்ஸ்டாரை சப்ஸ்க்ரைப் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் இருந்தாலும், அறிவியல் நிகழ்ச்சிகளுக்கென பிரத்யேகமாக டிஸ்கவரி சேனல் நிறுவனம் புதிய அப்ளிகேசனை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி ப்ளஸ் அப்ளிகேசனும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. டிஸ்கவரி ப்ளஸ்ஸின் மாத சந்தா ரூ.99 ஆகும். ஆனால் தற்போது ரூ.99 செலுத்தினால் ஒரு ஆண்டு சந்தா அளிக்கப்படுவதாக டிஸ்கவரி அறிவித்துள்ளது. இதில் டிஸ்கவரி, டிஎல்சி, டர்போ என அனைத்து டிஸ்கவரி கிளை சேனல்களின் நிகழ்ச்சிகளும் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கின்றன. மேலும் ப்ரீமியம் நிகழ்ச்சிகள், எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கவும் முடியும். இந்த சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்பதால் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக சப்ஸ்க்ரைப் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.