1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2016 (17:44 IST)

இந்திய ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல்: பணப் பரிமாற்றத்தில் எச்சரிக்கை

ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதலில் இந்தியா 2வது இடம்

ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல் ஏற்படுவதில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக கேஸ்பர்ஸ்கி ஆன்டிவைரஸ் ஆய்வகம் தெரிவித்துள்ளது.


 

 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், ஸ்மார்ட்போனில் சைபர் கிரிமினல்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பிரபல ஆன்டி வைரஸ் மென்பொருளான கேஸ்பர்ஸ்கி தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிகளவில் ஸ்மார்ட்போன் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மால்வேர் எனப்படும் வைரஸ்களின் தாக்குதல் இந்திய ஸ்மார்ட்போன்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல்கள் ஸ்மார்ட்போனில் இருந்து பல்வேறு சொந்த தகவல்களையும், பணப் பரிமாற்றத்தின் போது கடவுச் சொல்லை(password) திருடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதனால், ஸ்மார்ட்போனில் பணப் பரிமாற்றத்தை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை கேஸ்பர்ஸ்கி ஆய்வகத்தின் தெற்கு ஆசிய இயக்குனர் இத்தாப் கால்தே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.