திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (13:07 IST)

ரீசார்ஜ் பண்ணுனா மட்டும் போதும்.. ப்ரைம் இலவசம்! ஏர்டெல்லின் அசத்தல் ஆபர்!

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓடிடி தளங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் ஏர்டெல்லுடன் இணைந்து புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது அமேசான் ப்ரைம்!

தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியா 4ஜியிலிருந்து 5ஜிக்கு அப்டேட் ஆகி வரும் நிலையில் ஆன்லைன் ஓடிடி தளங்களான நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்றவை மக்களால் பெரிதும் படம்பார்க்க பயன்படுத்தப்படும் ஓடிடியாக மாறியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்த நெட்ப்ளிக்ஸ் மொபைலில் மட்டும் பார்க்க மாதம் 199 ரூபாய் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் மொபைல்களுக்கென தனி ஆபர்கள் எதுவும் இல்லாமல் மாதம் 129 ரூபாய் அல்லது வருடத்திற்கு 999 ரூபாய் போன்ற ப்ளான்களே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஏர்டெல்லுடன் இணைந்து அமேசான் ப்ரைம் மொபைல் எடிசன் என்ற புதிய ஆபர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ரூ.89 முதல் நான்கு விதமான ரீசார்ஜ் ப்ளான்களில் ஏதேனும் ஒன்றில் ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால் டேட்டாவுடன் அமேசான் ப்ரைமை மொபைலில் பார்ப்பதற்கான வசதியும் கிடைக்கிறது. இந்த சலுகை ஏர்டெல்லை நோக்கி மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.