வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இஸ்லாம்
Written By

இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளில் சில...!!

குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன்  ஆவான்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
 
ஏழைகளின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்பவன் எவனோ, அவனது தேவைகளை ஆண்டவன் நிறைவேற்றி வைக்கிறான்.
 
உங்களுடைய குழந்தைகளே உங்களுடைய மேலான சேமிப்பு. தருமங்களில் மேலானது மக்களுக்கிடையில் சமாதானம் நிலவச் செய்தல்.
 
மறுமலர்ச்சியோடு இருப்பவரையும், இனிய மொழி பேசுவோரையும் இறைவன் விரும்புகிறான் உடல் நலமே மேலான செல்வம்.
 
ஆண்டவனுடைய படைப்புகளையும் தன்னுடைய மக்களையும் எவன் நேசிக்கவில்லையோ அவனை ஆண்சவனும் நேசிக்க மாட்டான்.
 
உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
 
நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.