விராட் கோலி புதிய சாதனை...
சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் 14 வது சீசனில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சென்னை அணிக்கு எதிரான அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோலி. மேலும், இன்றைய ஆட்டத்தில் கோலி 66 ரன்கள் எடுத்தால், டி-20 போட்டியில்10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கிறிஸ் கெயில் 14,261 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.