திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (23:28 IST)

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2021-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து அணிகளும் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இன்யோன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சுத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு  124 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்கள்  எடுத்து கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில்,பஞ்சாப் 9 போட்டிகளில் வென்றுள்ளது. 19 போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.