புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:54 IST)

திரையரங்குகளில் ஐபிஎல் இறுதி போட்டி: குவியும் ரசிகர்கள்

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த போட்டியை நேரலையில் தொலைக்காட்சியிலும் நேரடியாகவும் பார்க்க கோடிக்கணக்கான ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் தற்போது திரையரங்குகளிலும் இந்த  போட்டி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் போட்டி முழுவதுமாக நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது