புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (23:32 IST)

தோனியை எல்லோருக்கும் பிடிக்க இதுதான் காரணம்...வைரலாகும் புகைப்படம்

ஐபிஎல்-2021 14வது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், சென்னை அணியினர் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

நடப்பு தொடரில் ஒரு போட்டியில் தோற்றாலும் மற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் மைதானத்தில் ஒரு ஊழியருக்கு சல்யூட் அடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இப்போட்டிக்குப் பின் தோனி டிரஸ்ஸிங் ரூம்பிற்குச் செல்லும்போது, ஊழியர் ஒருவர் அவருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு தோனி சல்யூட் அடித்தார்.

இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதில், தோனியின் செயல் குறித்து, இதுதான் சார் கடவுள்ங்கறது எனப் புகழ்ந்து வருகின்றனர்.