சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !!
சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சென்னை அணியினர் பேட்டிங்கில் அசத்தினர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.