ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Updated : திங்கள், 10 மே 2021 (09:11 IST)

இளம் கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா. ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களின் விக்கெட்களை எடுத்து கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இவரின் தந்தை காஞ்சிபாய் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இப்போது அவர் உயிரிழந்துள்ளார்.