ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆன ரஷித் கான்! எப்படி தெரியுமா?

Last Updated: புதன், 14 அக்டோபர் 2020 (17:14 IST)

நேற்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ரஷித் கான் ஒரே பாலில் இரண்டு முறை அவுட்
ஆனார்.


நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது மிகவும் இன்றியமையாத வெற்றியாகும். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 19 ஆவது ஓவரில் பேட் செய்து கொண்டிருந்த ரஷித் கான் ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆனார்.

தாக்கூர் வீசிய பாலை அடிக்க் பின்னோக்கி சென்ற ரஷித் கான் தனது காலால் ஸ்டம்புக்களை தள்ளிவிட்டார். அதனால் ஹிட் விக்கெட் ஆனார். அதே போல அவர் அடித்த பந்தும் எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் ஆனது. ஆனால் முதலிலேயே அவர் ஹிட் விக்கெட் ஆகி விட்டதால் அந்த முறையிலேயே அவர் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.இதில் மேலும் படிக்கவும் :