திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : சனி, 24 அக்டோபர் 2020 (10:50 IST)

பட்லரை அடுத்து பாண்ட்யா பிரதர்ஸ்… தோனியின் ஜெர்ஸியோடு வெளியான புகைப்படம்!

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஜெர்ஸியுடன் பாண்ட்யா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் இடம் பெறாதது மட்டுமன்றி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியை இழந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லாதது இதுவே முதல்முறை. நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களின் மேல் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதையெல்லாம் விட்டுவிட்டு தோனி ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய போட்டி முடிந்ததும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் தோனியின் ஜெர்ஸியை அவரின் நினைவாக வாங்கிக் கொண்டு அதைப் புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இதுபோல ஜோஸ் பட்லரும் தோனியின் ஜெர்ஸியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.