திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (20:17 IST)

சென்ற ஆண்டு பர்ப்பிள் கேப் வின்னர்… இந்த ஆண்டு டிரிங்ஸ் பாய் – தாஹீருக்கு இந்த நிலைமையா?

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான இம்ரான் தாஹீர் இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட இறக்கப்படவில்லை.

சிஎஸ்கே அணிக்காக கடந்த 4 ஆண்டுகளாக விளையாடி வரும் இம்ரான் தாஹீர் சென்ற சீசனில் அதிக விக்கெட் எடுத்ததற்காக பர்ப்பிள் கேப்பை வெற்றி பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் இன்னமும் ஒரு போட்டியில் கூட இறக்கப்படவில்லை. அதுகூட பரவாயில்லை ஒவ்வொரு போட்டியிலும் டிரிங்ஸ் எடுத்துக்கொண்டு வந்து வீரர்களுக்குக் கொடுத்து செல்கிறார். இதனால் அவருக்கு இந்த நிலைமையா என்ற இணையத்தில் பதிவுகள் உருவாக ஆரம்பித்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இம்ரான் தாஹீர் ‘நான் அணியில் இருந்த போது நிறைய வீரர்கள் எனக்கு குளிர்பானம் எடுத்து வருவார்கள். இப்போது தகுதியான வீரர்கள் களத்தில் ஆடும்போது நான் ட்ரிங்க்ஸ் சுமந்து செல்கிறேன். இது என் கடமையல்லவா. நான் விளையாடுவதை விட அணியின் வெற்றியே முக்கியம். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது சிறப்பாக செயல்படுவேன்’ எனக் கூறியுள்ளார்.