எந்த சர்ச்சையும் இல்லாமல் கேப்டன் பொறுப்பு எனக்கு வந்துள்ளது – மோர்கன் பதில்!

Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (16:43 IST)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவி தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து மோர்கனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 7 போட்டிகளில் மற்ற அணிகளோடு மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி ஐபிஎல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த முதல் சுற்றில் 7 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இயான் மோர்கன் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இரண்டாம் சுற்று ஆட்டங்களுக்கு இவரே கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் பேசிய மோர்கன் ‘எந்த சர்ச்சையும் இல்லாமல்தான் எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை துறக்க அவருக்கு அசாத்திய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். எங்கள் அணியின் பல கேப்டன்சி திறமையுள்ள வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணியின் வளர்ச்சிக்கு தேவை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :