தோனி அபார பேட்டிங்: ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை அணி

Last Updated: திங்கள், 1 ஏப்ரல் 2019 (06:25 IST)
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12வது போட்டியில் சென்னை அணி தோனியின் அபார பேட்டிங் காரணமாக 175 ரன்கள் குவித்தது. 176 என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான், 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகள் எடுத்து சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

சென்னை அணி:

தோனி: 75 ரன்கள்
ரெய்னா: 36 ரன்கள்
பிராவோ: 27

ராஜஸ்தான்: 167/8

ஸ்டோக்ஸ்: 46 ரன்கள்
திரிபதி: 39 ரன்கள்
ஸ்மித்: 28 ரன்கள்
ஆட்டநாயகன்: தோனி

இன்றைய போட்டி: பஞ்சாப் vs டெல்லி
இதில் மேலும் படிக்கவும் :