1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (13:42 IST)

மும்பை இந்தியன்ஸும் ப்ளே ஆஃப்புக்கு போகல: ப்ரீத்தி ஜிந்தாவின் அற்ப மகிழ்ச்சி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று புனேவில் நடந்த கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
பஞசாப் அணி ப்ளே ஆஃப் வாய்ப்ப்பு பறிபோனது. தற்போது, முதல் நான்கு இடத்தை பிடித்துள்ள ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
 
இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவின் பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பஞ்சாப் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணி தோல்வியுற்றதை நினைத்து வருத்தப்படாமல், மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சியாக உள்ளது என தனது நண்பரிடம் ஆங்கிலத்தில் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பான ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 
 
ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த அற்ப மகிழ்ச்சியை பலர் விமர்சித்து வருகின்றனர். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மற்றவனுக்கு இரண்டு கண்ணும் போகனும் என்பது போல உள்ளது ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த அற்ப மகிழ்ச்சி.