1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (00:01 IST)

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில்  சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
 
எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும்  கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி  இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி  வைத்துக்கொண்டு வெந்நீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். 
 
 
யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை  குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
 
வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்னைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த  நிவாரணியாக விளங்குகிறது.வல்லாரை கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்கள் பலப்படுத்தப்படுவதால் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது. 
 
மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. மேலும் வல்லாரை கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு  மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். 
 
வல்லாரை கீரையை எடுத்துக் கொண்டு அதை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த  பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.  
 
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை  சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல்,  உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை  கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
 
வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜுஸாக்கி தினமும் 25 மில்லி (அ) 30 மில்லி குடித்து வர  மாரடைப்பு நோய் நம்மை நெருங்காது.